சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாரவில ஹட்டினிய பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மரமொன்று உடைந்து வீழ்ந்துள்ளமையாலே அவ்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.