நாட்டுக்கு சிறப்பினை தேடித்தந்த ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவுக்கு சிறப்பு நிபுணத்துவ வைத்திய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை தியதலாவை வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ள சுசந்திக ஜெயசிங்கவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.