மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாக அபுதாபி, சார்ஜா, டுபாய், குவைத், ஓமான் மற்றும் கடார் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானங்கள் இன்று வரவில்லை என விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.