மத்ரஸா மற்றும் பள்­ளி­வா­சல்­களின் மூல­மா­கவே பயங்­க­ர­வாதம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் அடிப்ப­டை­வா­தத்தை பலப்­ப­டுத்தும் அனைத்து முஸ்லிம் செயற்­பா­டு­க­ளுக்கும் உட­ன­டி­யாக தடைவிதித்து முஸ்­லிம்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விடின் எந்த முறை­யி­லா­வது இதை நாம் தடுக்­க வேண்டி வரும் என பொது­பல சேனா அமைப்பு தெரிவித்துள்­ளது.

முஸ்­லிம்கள் அடிப்படை வாதி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் மாறி­வரும்போது நாம் இன­வா­தி­க­ளாக மாறு­வதில் தவறில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்­பிட்­டது.

பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அதன் அந்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத கொள்­கையும்,தீவி­ர­வாத செயற்­பா­டு­களும் பர­விக்­கொண்டு வரு­வ­தாக ஆதா­ரங்­க­ளுடன் கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் நாம் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தோம். எனினும் எமது கருத்­துக்­களை கவ­னத்தில் கொள்­ளாது நாம் இன­வா­திகள் என்ற வகையில் முஸ்லிம் தலை­வர்­களும் அர­சாங்­கத்­தி­னரும் எம்மை விமர்­சித்­தனர். ஆனால் இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் சர்­வ­தேச தரப்பில் இருந்து வெளி­யி­டப்­பட்­டுள்ள பாது­காப்பு அறிக்­கையில் இலங்­கையில் அதி தீவி­ர­மாக ஐ.எஸ் பயங்­க­ர­வாத அமைப்பின் செயற்­பா­டுகள் உள்­ள­தென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச புல­னாய்வு பிரிவின் அறிக்­கையின் பின்னர் இலங்­கையும் அதை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. எனினும் சர்­வ­தேச பிரி­வினர் தெரி­விக்கும் வரையில் எமது புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு இலங்­கையில் என்ன நடக்­கின்­றது என்­பது தெரி­ய­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் இப்­போது இலங்­கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் உட­ன­டி­யாக கவனம் செலுத்­தா­விடின் எதிர்­கா­லத்தில் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொள்­ள­வேண்டி வரும். இஸ்­லா­மிய இராச்­சியம் ஒன்று இலங்­கையில் உரு­வாகும்.

இலங்­கையில் சட்­ட­வி­ரோ­த­மா­கவும் அடிப்­ப­டை­வா­தத்தை பரப்பும் வகை­யிலும் செயற்­படும் 15 இஸ்­லா­மிய அமைப்­புகள் செயற்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக ஐ.ஐ.ஆர்.ஒ, ஐ.ஆர்.ஒ, அல-­சபாப், முசலி மார்க், முஸ்லிம் எயிட், நிடா, ஹிரா, எம்.எப்.சி.டி, செரண்டிப், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹித் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாம், சலாபி போன்ற அமைப்­புகள் தான் இலங்­கையில் மிக­மோ­ச­மான வகையில் மத­மாற்று நட­வ­டிக்­கை­க­ளையும், பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். முஸ்­லிம்­களின் செயற்­பா­டு­களில் விசா­ரணை தேவை.

இந்த அமைப்­பு­களின் மூல­மா­கவே எமது இனம் அழிந்து வரு­கின்­றது. ஆகவே உட­ன­டி­யாக முஸ்­லிம்­களின் அடிப்­படை வாத செயற்­பா­டு­களை நிறுத்­த­வேண்டும். இன்று இணையம் மூல­மாக முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். முஸ்­லிம்­களின் வாக்­கு­களில் தான் இந்த அர­சாங்கம் அமைந்­துள்­ளது என்ற எண்­ணத்தில் இன்று செயற்­பட்டு வரு­கின்­றனர். முஸ்­லிம்­களை திருப்­திப்­ப­டுத்த நாட்டை கூறு­போடும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இன்று நிலைமை மிகவும் மோச­மா­கி­யுள்­ளது. ஆகவே உட­ன­டி­யாக முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்பை தடுக்க வேண்டும். அதை தேடும் வகையில் ஆணைக்­கு­ழுவை அமைக்க வேண்டும்.

அதேபோல் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் மத­ர­சாக்­களை சுற்­றி­வ­ளைத்து விசா­ரிக்க வேண்டும். முடிந்தால் உட­ன­டி­யாக மத­ரசா கற்­கையை நிறுத்த வேண்டும். அதேபோல் முஸ்லிம் நாடு­களில் இருந்து வரும் புத்­த­கங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். ஹலால் தொடர்­பிலும் விசா­ரிக்க வேண்டும்.

ஆகவே இவ்­வாறு முஸ்லிம் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை பரப்பி நாட்டை சீர­ழித்து சிங்­கள தமிழ் மக்­களை சீர­ழிக்கும் நட­வ­டிக்­கை­களை முஸ்­லிம்கள் முன்­னெ­டுத்தால் நாமும் எமது இனத்தை காப்­பாற்ற எந்த மட்­டத்­திலும் சென்று போரா­டுவோம். என்றார்.

அமைப்பின் பணிப்­பாளர் டிளந்த விதா­னகே கூறு­கையில்,

இந்த தகவல் என்­பது சாதா­ரன ஒரு விடயம் இல்லை. இஸ்­லா­மிய இராச்­சியம் என்­பது புதி­தாக உரு­வாக்­கிய ஒன்­றல்ல. இஸ்லாம் என்ற மதம் உலகில் உரு­வாக்­கப்­பட்ட நாளில் இருந்து இந்த பிரி­வினை வாதமும் தலை­தூக்­கி­விட்­டது. இஸ்­லா­மிய அடிப்­படை கல்­வியில் இருந்து பிரி­வினை என்­பதை பல­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆகவே இது புதிய விடயம் அல்ல. ஆக்­கி­ர­மிப்­புடன் கூடிய ஒரு மதம் செயற்­ப­டு­கின்­றது எனின் அது இஸ்­லா­மிய மதம் மட்­டு­மே­யாகும்.

இஸ்­லா­மியம் என்­பது மதமா? அர­சி­யலா?

ஆகவே இஸ்­லா­மியம் என்­பது மதமா அல்­லது அர­சி­யலா என்­பது தொடர்பில் பாரிய சிக்­க­லுடன் கூடிய சந்­தேகம் எழுந்­துள்­ளது. ஏனினில் இன்று கிறிஸ்­தவ மதம் தோன்றி பல­நூறு ஆண்­டுகள் கடந்தும் மதத்தில் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யதை போல் இஸ்­லா­மி­யமும் தமது மதத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள பல்­வேறு மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. அதேபோல் இஸ்­லா­மி­யமும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு மத­மாக மாறி வரு­கின்­றது. அரபு வசந்த கால­கட்­டத்தில் இருந்து இந்த கொள்­கையில் பய­ணிக்க ஆரம்­பித்து விட்­டனர். அதேபோல் இஸ்­லா­மிய கல்வி முறை­மையும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு தமக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை தடுத்து வரு­கின்­றனர். அதா­வது மத்­திய கிழக்கில் பெண்­களின் கல்வி மட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­து­வதன் மூலம் இஸ்­லா­மிய மீதான விமர்­சன கருத்­து­க­ளையும் மதம் தொடர்பில் எழும் கேள்­வி­யையும் தடுத்து வரு­கின்­றனர் .

இன்று உலக நாடு­களில் உள்ள முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தத்தின் பக்கம் ஈர்த்து முழு­மை­யாக முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­திகள் என்ற கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றனர். இதுதான் இஸ்­லா­மிய இராச்­சிய அமைப்பின் பிர­தான நோக்­க­மு­மாகும். இந்த நோக்­கமே கடந்த காலத்தில் இலங்­கை­யிலும் வேறு நாட்டு முஸ்­லிம்­களை குடி­ய­மர்த்தும் செயற்­பாட்டில் ஆரம்­பித்­தது.

முஸ்­லிம்­களை இலங்­கைக்குள் வர­வ­ழைத்து எமது சிங்­கள, தமிழ் பெண்­களை திரு­மணம் செய்து மத­மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு நாட்டை இஸ்­லா­மிய பூமி­யாக மாற்றும் போராட்­டத்தில் இறங்­கி­யுள்­ளனர். அதேபோல் எமது நாட்டில் உள்ள முஸ்லிம் மாண­வர்­களை மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு அனுப்பி அவர்­களை மூளை சலவை செய்து முழு­மை­யாக தீவி­ர­வா­தி­க­ளாக மாற்றும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இலங்­கையில் கடந்த காலத்தில் புலி­க­ளு­ட­னான யுத்­தத்தை சாட்டி மறு­பக்கம் முஸ்லிம் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை நாட்­டினுள் வளர்த்து விட்­டுள்­ளனர்.இன்று அவர்­களின் கட்­டுப்­பட்டு அர­சியல் வரையில் தலை­தூ­கி­யுள்­ளது.

எமது அர­சியல் தலை­வர்கள் முஸ்லிம் நாடு­களின் பணத்­திற்­காக நாட்­டையே சீர­ழிக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே இந்த நாட்டில் சிங்­கள, தமிழ் மக்­களை பாது­காப்­பதைப் போலவே இலங்­கையில் வாழும் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளையும் பாது­காக்கும் செயற்­பாட்­டையே முன்­னெ­டுக்க வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்றோம்.

ஹலால், மத­ரசா கல்­வியில் சந்­தேகம்.

ஹலால் மூலம் சேக­ரிக்கும் பணம் எங்கு போகின்­றது என்­பது தொடர்பில் எமக்கு ஆரம்­பத்தில் இருந்தே சந்­தேகம் இருந்­தது. ஆனால் இப்­போது அந்த உண்­மையும் வெளி­யா­கி­யுள்­ளது. ஹலால் மூலம் சேக­ரிக்­கப்­படும் பணத்தை ஐ.எஸ் உள்­ளிட்ட முஸ்லிம் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கே வழங்­கப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் உலமா உள்­ளிட்ட முஸ்லிம் அமைப்­புகள் மிகவும் நெருக்­க­மாக பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­துள்­ளது.

இலங்­கையில் உள்ள முஸ்­லிம்கள் கல்வி மட்­டத்தில் நல்ல நிலையில் உள்­ளனர், அவர்கள் தமிழ் சிங்கள் மக்­க­ளுடன் நல்ல உறவை பேணி வரு­கின்­றனர். அதை சீர­ழிக்கும் வகையில் தான் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. கிழக்­கிலும் மத்­திய பகு­தி­க­ளிலும் இவர்கள் முன்­னெ­டுக்கும் மத­வாத கோட்­பா­டுகள் மூல­மாக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் சந்­தேகக் கண்­ணோட்­டத்தில் பார்க்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அதேபோல் இலங்­கையில் உள்ள மத­ர­சாக்கள் அனைத்தும் கல்வி அமைச்சின் கீழ் இயங்­க­வில்லை. ஆகவே இந்த மத­ரசா மூல­மா­கவும் பள்­ளி­வாசல் மூல­மா­க­வுமே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் முஸ்­லிம்கள் மத்­தியில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. ஆகவே இந்த விட­யங்­களே முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தத்தை பரப்பும் வகையில் அமைந்­துள்­ளது.

இலங்­கையில் கடந்­த­கா­லத்தில் இடம்­பெற்ற பெளத்த அடக்­கு­மு­றைகள் அனைத்தின் பின்னணியிலும் முஸ்லிம் அடிப்படைவாதிகளே உள்ளனர். அதேபோல் அளுத்கமை பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தின்போது முதல் தாக்குதல் இந்த ஐ.எஸ் பயங்கரவாத நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இது வரையில் எவரும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இதுவே நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது.

நல்லிணக்கம் என்ற திரையினுள் பயங்கரவாதம்.

இன்று முஸ்லிம்கள் தாங்களை நல்லிணக்க வாதிகளாக வெளிக்காட்டிக்கொண்டு இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாத பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத்திலோ, சட்ட ராதியாகவோ இந்த விடயம் தொடர்பில் கதைக்க முடியவில்லை. ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இந்த விவகாரம் தொடர்பில் கவனத்தில் கொள்ளது செயற்படுகின்றனர். நாம் கூறிய விடயங்கள் இன்று உண்மையாகிவிட்டன என்றார்.