(எம்.ஆர்.எம்.வஸீம்)

 அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளாமல் பொருளாதார விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நவ சமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்வதற்கு அரசியலமைப்பு ஊடாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில், அரசாங்கம் அரசியல் பிரச்சினையை தீர்த்ததன் பின்னர்தான் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் அரசியலமைப்பில் அதுதொடர்பான உறுதியான தீர்மானங்கள் இருக்கவேண்டும் என்றார்.