அம்பாறை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் வடினாகல பகுதியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பபெறவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.