திஸ்ஸமஹாராம - தம்பரவெவ பகுதியில் சட்டவிரோதமதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து  3 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

தங்காலை பொலிஸ் குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டதில் 2 துப்பாக்கிகள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.