பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரில் எதிர் வரும் புதுவருடத்தில் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத் தின் பேரில் இருவரை அந்நாட்டு பொலி ஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட் கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மேற்படி தேடுதல் நடவடிக்கையின் போது தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந் ததாக நம்பப்படும் இராணுவ சீருடைகள் மற்றும் பொருட்களை பொலிஸார் கைப்பற் றியுள்ளனர்.

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல் நடவடிக்கையையடுத்து பெல்ஜியத்தில் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான உயர் பாதுகாப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள் ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் தீவிரவாத குழுவொன்றுக்கு தலைமை தாங் கியதாக சந்தேகிக்கப்படுகிறது.