(க.கமலநாதன்)

நீண்டகாலமாக இழுபறி நிலையில் காணப்படுகின்ற தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து தேசிய அரசாங்கத்தினையும் நிறுவினோம்.

எனவே அரசாங்கத்தின் உள்ளிருந்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் நாட்டை ஒன்றுபடுத்தும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் பிரிந்து செல்லுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகலவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராம்ங்கள், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.