விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவா்  பிரதமராகியிருப்பாா்”என சிறுவா், பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். 

கடந்த செப்டெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு  நட்டஈடு இன்றைய தினம், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்த அழிவை மகிந்த ராஜபக்ஷ முடித்து வைத்ததாக இங்கு சில அரசியல் வாதிகள் பேசுகின்றனா். ஆனால் அவ்வாறு இனவாதம் பேசுவதனால் நமக்கு கிடைப்பதும் கிடைக்காது போய்விடும். இப்படி இனவாதம் பேசாது இந்த நல்லாட்சி அரசின் மூலம் எதை பெற்றுக்கொள்ள முடியும் எதை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

தெற்கிலும் சரி வடக்கிலும் சரி இனவாதம் பேசுவதனால் எமது சந்ததிதான்  பாதிப்படைகிறது. எமது நல்லாட்சியில் மக்களுக்கான நல்ல விடயங்களே இடம்பெற்று வருகிறது. எனவும் குறிப்பிட்டாா்