மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட சின்னச்சவுக்கடி கிராமத்திலுள்ள நெல் வயலில் இருந்து இன்று காலை கைக்குண்டு ஒன்றை தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தனது வயலில் களை நாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது இந்த குண்டை கண்டவுடன் அது குறித்து அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களும் பொலிஸாரும் அதனை மீட்டு செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புழக்கத்தில் இருந்த கையேறி குண்டு வகையைச் சேர்ந்தது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

-அப்துல் கையூம்