வரலாற்றில் முதன் முதலாக தாக்கப்பட்ட இடத்தை பார்க்கச் சென்ற ஜப்பான் பிரதமர் (காணொளி இணைப்பு)

Published By: Ponmalar

27 Dec, 2016 | 08:02 PM
image

அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார்.

தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள்.

1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்க்க 1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்கா தொடுத்த அணுகுண்டு தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவிற்கு வந்தது.

இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவால் தாக்குதலுக்குள்ளான ஹிரோஸிமா பகுதியை பரக் ஒபாமாவும், ஜப்பானால் தாக்குதலுக்குள்ளான பெரெல் துறைமுகத்தை அந்நாட்டு பிரதமரும் இவ்வருடம் பார்வையிட்டுள்ளனர்.

இதுவே இரு நாட்டு தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற முதல் தருனமாகும்.

இருப்பினும் இருநாட்டு தலைவர்களும் குறித்த தாக்குதல் தொடர்பாக வருத்தமோ அல்லது மன்னிப்போ தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதகு விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35