(ஆர்.யசி )

சர்வதேச  அழுத்தங்களில்  இருந்து மீளவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும்  நோக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்  இணைந்து செயற்பட  அரசாங்கம் தீர்மானித்ததே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஆட்சியை பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

அதியுச்ச  அதிகார பகிர்வு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தோற்கடிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பொது எதிரணி தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் முன்னணியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.