(ஆர்.யசி )

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது எனினும் புதிய அரசியலமைப்பின் மூலம்  வடக்கு- கிழக்கு மாகாணங்கள்  இணைக்கப்படவோ அல்லது ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ இடமளிக்கப்பட  மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லை மீறிய கோரிக்கைகளை முன்வைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்தது.

வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதுடன் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நிலைப்பாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவுள்ளது என விமர்சங்களை பொது எதிரணியினர் குற்றம் சுமத்திவரும் நிலையில் வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என வினவியபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.