சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம்

திகதி 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார். அவரது தந்தை அபு நிம்ர் அல் சுரி தாக்குதல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாம் மதப்பெண்கள் அணியும் உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்தி தாக்குதல் சூத்திரதாரியான சுரி குழந்தைகளுக்கு தற்கொலை தாக்குதல் பற்றிய விளக்கங்களை கொடுக்க, இறுதியில் அல்லாஹ்வு அக்பர் என சத்தமிட்டவாறு சிறுமிகள் குறித்த கட்டிடத்தை விட்டு வெளியில் வருகின்றனர்.

தொடர்ந்து டமாஸ்கஸ் பொலிஸ் நிலையம் தாக்குலுக்குட்பட்டிருந்தது. அத்தாக்குதலில் பொலிஸ் நிலையத்திலிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமுற்றதோடு குறித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் தந்தை அல்கைதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பான அல் நூஸ்ரா அமைப்புடன் இருந்தவர் என்றும் அத்தோடு ஐ.எஸ் அமைப்புடனான பல குற்றச்செயல்களை முன்னெடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிரியாவில் தீவிரவாத அமைப்பினர் மீதான தாக்குதலின் போது அல்சுரி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.