திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு கருணை காட்டுங்கள் :கண்ணீருடன் உறவினா்கள் கோரிக்கை.!

Published By: Robert

27 Dec, 2016 | 03:10 PM
image

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என அவர்களது பெற்றோர்களும், மனைவிமாரும் இன்று கிளிநொச்சியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் 10 பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் ஒரு பெண் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் பலிகொடுத்துள்ள நிலையில் தற்போது இருக்கின்ற ஒரு மகன் தமிழ்நாடு சென்ற நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். சட்ட ரீதியாக விசா எடுத்து சுற்றுலாவுக்குச் சென்ற மகனை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வந்துள்ளதாக கூறி அதற்கு ஒப்பம் இடுமாறு தொடர்ந்தும் துன்புறுத்தி வருகின்றனர் என தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்தில் மிகமோசமாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு எங்களது பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருவதான செய்தி எங்களை மனதளவில் பாதித்துள்ளது.

அத்துடன் அவர்கள் சில வேளை ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மண்ணித்து தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள் 10 பேரில் ஒருவரின் தந்தையான உமாகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றேன்.

எனது கணவர் கைது செய்யப்படும் போது இரண்டாவது குழந்தை 7 மாதம் வயிற்றில் இருந்தது. தற்போது எனது குழந்தைக்கு அப்பாவின் முகம் தெரியாது. மூத்த மகள் 4 வயது நாளாந்தம் அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றாள்.

தயவு செய்து எனது பிள்ளைகளுக்காக எனது கணவரை விடுதலை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் தனது அப்பாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நான்கு வயது பெண் குழந்தை அழுதவாறு கேட்டுக்கொண்டமை மனதை நெகிழ வைத்த சம்பவமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22