ஜா-எல பகுதியில் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 2 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 25 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (26) கடவத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.