49 வயதுடைய சடலத்தை பதுளை, சேனாநாயக்க மைதானத்திலிருந்து பதுளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். 

ரெங்கசாமி மஹேந்திரன் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இவர் பதுளை, ஹிதகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக குறித்த சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பதுளை  பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.