புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (02)

Published By: Ponmalar

25 Dec, 2016 | 08:07 PM
image

(ஆர்.ராம்)

நேற்றைய தொடர்ச்சி...

அதேநேரம் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய விடயங்களுக்காக வழிநடத்தல் குழுவால் தனித்தனியாக ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.  

வழிநடத்தல் குழுவின் நிர்வாகம் 

பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியுமான நீல் இத்தவல அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் செயலாளராக விளங்கி அதற்கான சேவையை ஆற்றுவதோடு, நடைபெறும் வழிப்படுத்தும் குழுவின் கூட்டங்களில் பேச்சாளராகவும் உள்ளார். 

 வழிநடத்தும் குழுவின் பணிகளை விரிவாக்கவும், ஒழுங்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றினை முகாமை செய்யும் வகையில் முகாமைத்துவ குழுவொன்று வழிநடத்தும் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற போது நியமனம் செய்யப்பட்டது. 

இந்த முகாமைத்துவ குழுவானது வழிப்படுத்தும் குழு, உப குழுக்கள், மற்றும் அலுவலகர்கள் தேவைகள் உட்பட்ட பணிகளையும் கவனத்தில் கொண்டு சேவையாற்ற வேண்டியுள்ளது. குறித்த முகாமைத்துவ குழுவுக்கான அங்கத்தவர்களில் இணைத்தலைவர்களாக டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன (இணைத் தலைமை) எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இருக்கின்றனர்.

தலைமை அலுவலராக  பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் வழிநடத்தும் குழுவின் செயலாளருமான நீல் இத்தவல, பாராளுமன்ற சபைத் தலைவரின் செயலாளர் அப்துல் நௌபர் ரஹ்மான், பிரதமரின் மேலதிக செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திருமதி பிம்பா திலகரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர். 

அரசியலமைப்புச் சபையின் செயலகம் 

அரசியலமைப்புச் செயற்பாட்டுக்கென வழிநடத்தல் குழுவினரால்  உருவாக்கப்பட்ட நிர்வாக அலகாக அரசியலமைப்புச் சபையின் செயலகம் விளங்குகின்றது. அரசியலமைப்பு செயலகமானது பாராளுமன்ற செயலகத்தினுள் செயற்பட்டு வருவதுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க தஸநாயக்க விளங்குவதுடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக  நீல் இத்தவல விளங்குகின்றார்.

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அமர்வின் போது கடந்த மே மாதம் 5ஆம் திகதி அரசியலமைப்புச் சபைச் செயலகத்துக்கான மேலதிக செயலாளராக திருமதி யுரேஷா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். வழிநடத்தும் குழுவின் ஒழுங்கான அமர்வுகளை திட்டமிடுதல்,  ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்,  குறிப்பிட்ட குழுக்களுக்கு தேவையான வளபொருட்களை வழங்குதல், நிபுணர்களின் பங்களிப்புக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான அனுசரணைகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை செயலகம் மேற்கொள்கின்றது. 

அத்தோடு  வழிநடத்தல் குழுவுக்கு நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஆய்வுகள் மற்றும் நிபுணர்களது வாய்மூலமான கருத்துக்கள் உள்ளிட்ட உள்ளீட்டு மூலவளங்களை வழங்குவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசியலமைப்புச் செயலகத்தின் பணியாகின்றது. மேலும் வழிநடத்தும் குழுவுக்கும் உப குழுக்களுக்கும் இடையிலான பாலமாகவும் அரசியலமைப்புச்சபை செயலகம் செயற்பட்டு வருகின்றது. 

அரசியலமைப்புச் சபை மற்றும் வழிநடத்தல் குழுவால் பேராசிரியர் சுரி ரத்னபால, பேராசிரியர் ஒஸ்டின் புள்ளே, பேராசிரியர் ஏ.ம்.நவரத்ன பண்டார, என்.செல்வக்குமாரன், கலாநிதி கமேனா குணரத்ன கலாநிதி.கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, நிரான் அன்கிற்றெல், அசோக குணவர்த்தன ஆகியோரடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

பொதுமக்களுக்கு மேலதிக சந்தர்ப்பம்

நாட்டு மக்களின் தற்போதைய அபிலாஷைகள் மற்றும் எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதற்காக வழிநடத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினைத் தொடர்ந்து, பொது பிரதிநிதித்துவ குழுவிற்கு பிரதிநிதித்துவம் செய்யாத பொதுமக்களுக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நேரடியாக வழிப்படுத்தும் குழுவினருக்கு சமர்ப்பிப்பதற்கு மேலதிகமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறிப்பாக வழிநடத்தும் குழுவின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக பத்திரிகை விளம்பரமொன்று கடந்த மே மாதம் 10 ஆம் திகதி  எழுத்துமூல பிரதிநிதித்துவங்கள், வழிப்படுத்தும் குழு உப குழுக்களினால் தீர்மானிக்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் அனுப்பப்படல் வேண்டும் என்ற வகையில் விபரங்கள் அடங்கலாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வகையில் எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்கும் கால எல்லை கடந்த மே மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.  

பலதரப்பினருக்கும் வழங்கப்பட்ட சந்தர்ப்பம்

அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் ரீதியான நிறுவனங்கள், அனைத்துக்கும்  தத்தமது எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை சமர்ப்பிக்கும் படி வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கையையும் வழிநடத்தல் குழு செய்திருந்தது. அதுமட்டுமன்றி வழிநடத்தும் குழு ஆரம்ப ஆய்வுகளின் போது, அரசியல் கட்சி மற்றும் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் குழுவின் முன்னிலையாகி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

அதுமட்டுமன்றி அந்தந்த துறைகளின் உப குழுக்களுக்கு முன்னிலையில் தமது வாய்மூல சமர்ப்பிப்புக்களை வழங்கும் வகையில் அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குமான வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை வழங்குவதற்கான கால எல்லை வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான தேவைகளின் பொருட்டு கால எல்லை நீடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியிலும் அரசியல் கட்சி பிரதிநிதித்துவங்கள் தமது சமர்ப்பிப்புக்களை அரசியலமைப்பு சபை செயலகத்திடம் சமர்ப்பித்தனர்.

உபகுழுக்கள் விபரம் 

ஆறு உப குழுக்களும் அக்குழுவின் தலைவர்களை உள்ளடக்கிய வகையில் 11 அங்கத்தவர்களைக் கொண்ட வகையில், அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினரால் நியமிக்கப்பட்டன.

அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தும் குழுவினரால் பாராளுமன்றத்தினுள் காணப்படும் கட்சி பிரதிநிதித்துவங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான முறையில் இவ் உப குழுக்களுக்கான அங்கத்தவர்களின் நியமனம் அமைந்திருந்தது.

ஆறு உப குழுக்களுக்குமான ஆறு தலைவர்களும் உப குழுவின் அங்கத்தவர்களிலிருந்து பதவியின் சிரேஷ்ட பரிசீலனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அத்துடன் உப குழுக்களுக்கான நிர்வாக ஆதரவுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் உப குழுக்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

'அடிப்படை உரிமைகள்' தொடர்பான உபகுழுவில் அடிப்படை உரிமைகள், மொழி உரிமைகள், அரச கொள்கையின் வழிகாட்டும் நெறிகள், குடியுரிமை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக மஹிந்த சமரசிங்க(தலைவர்), அநுராத ஜயரத்ன திருமதி பவித்ராதேவி வன்னியாரச்சி, விஜித ஹேரத், வாசுதேவ நாணயக்கார வணக்கத்துக்குரிய அத்துரலிய  ரத்ன தேரர், எஸ்.ஸ்ரீதரன், அ.அரவிந்த் குமார் டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன, டாக்டர் திருமதி துஷித விஜேமன்ன, எம்.எச்.எம்.சல்மான் உள்ளனர். 

'நீதித்துறை'  தொடர்பான உபகுழுவில் நீதித்துறை, நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்ற பரிசீலனை, அடிப்படை உரிமைகள் சட்ட அதிகாரம் உள்ளடங்கலாக நீதித்துறையின் செயலாட்சி, அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம் (தலைவர்) அநுர பிரியதர்ஷன யாப்பா,  நவீன் திஸாநாயக்க, திருமதி தலதா அதுகோரள, சந்திம வீரக்கொடி, சுஜீவ சேனசிங்க, திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, எம்.ஏ.சுமந்திரன், உதய பிரபாத் கம்மன்பில, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் உள்ளனர்.

'சட்டம் மற்றும் ஒழுங்கு'  தொடர்பான உபகுழுவில் சட்டம் மற்றும் ஒழுங்கு,  பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர தேவை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இக்குழுவின் உறுப்பினர்களாக சாகல ரத்நாயக்க (தலைவர்) டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பழனி திகாம்பரம், அமீர் அலி சிஹாப்தீன், அஜித் பி.பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, அநுர திஸாநாயக்க, எம்.எஸ். தௌபீக், மாவை எஸ்.சேனாதிராஜா, நாமல் ராஜபக் ஷ,  செஹான் சேமசிங்க ஆகியோர் உள்ளனர். 

'பொது நிதி' தொடர்பான உபகுழுவில் பொதுநிதி, மாகாண மட்டத்திலான நிதி, பொது நிறுவனங்கள், மத்திய வங்கி மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக பந்துல குணவர்த்தன (தலைவர்), டாக்டர் சரத் அமுனுகம, வி.எஸ். இராதாகிருஷ்ணன், டாக்டர் திருமதி அனோமா கமகே, டாக்டர் ஹர்ஷ த சில்வா, இரான் விக்கிரமரத்ன, முத்து சிவலிங்கம், கெஹெலிய ரம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்னெத்தி, ஈ.சரவணபவன், தாரக்க பாலசூரிய ஆகியோர் உள்ளனர். 

'பொதுச் சேவை' தொடர்பான உபகுழுவில் பொதுச் சேவை, பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண அரச சேவை, உள்ளூராட்சி சேவை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக சுதந்திர ஆணைக்குழுக்கள், குறைகேள் அலுவல் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த (தலைவர்), கருணாரத்ன பரணவிதான, சந்திரசிறி கஜதீர, நிஹால் கலப்பத்தி, ஜே.சீ. அலவத்துவல, அப்துல்லா மஹ்ரூப், டாக்டர் ரமேஷ் பதிரண, வேலுகுமார், ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோர் உள்ளனர். 

'மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு' குறித்த உபகுழுவில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபை ஆணைக்குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு, உள்ளூர் அதிகார சபைகள், மாகாணசபை நிறைவேற்று அதிகார சபை, மத்திய நிலையங்களுக்கான தகுதிகள், மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள், நிர்வாக அமைப்பு (மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள்) மற்றும் பல  விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன இக்குழுவில் தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர்), டிலான் பெரேரா, எச்.எம்.எம். ஹரீஸ், டலஸ் அழகப்பெரும, பிமல் ரத்னாயக்க, விதுர விக்கிரமநாயக்க, மயில்வாகனம் திலகராஜா, சனத் நிஷாந்த பெரேரா, எஸ்.எம்.மரிக்கார், திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன, விஜேபால ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் உள்ளனர்.

வழிப்படுத்தும் குழுவினரால் நேரத்துக்கு நேரம் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் ஆழ்ந்த அவதானிப்பின் பொருட்டு உப குழுக்களுக்கு முன்னிலையாக சமர்ப்பிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் உப குழுக்களின் தலைவர்களுக்கு உரிய முறையில் பரிமாறப்பட்டு ஆராயப்பட்டன. அவ்வகையில் பரிமாறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் உப குழுக்களின் தலைவர்களால் ஆழ்ந்து ஆராயப்பட்டன.

இந்த உபகுழுக்கள் பல்வேறு கலந்தாய்வுகளை மேற்கொண்டு தமது இறுதி அறிக்கைகளை வழிநடத்தும் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. வழிநடத்தல் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த அறிக்கைகள் ஆறும் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9,10,11ஆம் திகதிகளில் அவ்வறிக்கைகள் மீதான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.  

இவ்வாறான நிலையில் அரசிய லமைப்பை உருவாக்கும் கடினமான பயணத்தில் பங்கேற்றுள்ள வழிநடத்தல் குழுவின் பிரதிநிதிகளின் கருத்து பதிவுகள் அடுத்து....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22