கொத்மலையில் நேற்று இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய, வாகன சாரதியை  எதிர்வரும்  முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலபிட்டிய நிதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று உத்தரவிட்டார். 

ஜாஎல, கடான பகுதியை சேர்ந்த நபருக்கே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் 31 வயது மதிக்கதக்க வரதராஜ் சந்திரகலா என்று அடையாளம் காணப்பட்ட குறித்த பெண் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியின் சாரதியை கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.