(ந.ஜெகதீஸ்)

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல்அதிகாரசபை அறிவித்துள்ளது. 

இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் இயங்கும் தொழிற்சாலைகளின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதுடன், இதன்மூலம் குறித்த சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு எதிரான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரசபையின் சூழல் பாதுகாப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்ணாயக்க தெரிவித்தார்.