(ஆர்.யசி)

மக்கள் கருத்துக்கு விடப்படாத எந்தவொரு விடயமும் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படாது.இந்த விடயத்தில் எதிர்க்கட்சி தலைவரின் பாதை சரியானது  என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

இந்நிலையில் புதிய அரசியல் அமைப்பினூடாக அதிகாரப்பகிர்வு மூலமான அரசியல் தீர்வுக்கு  அரசாங்கம் தயாராக இருந்தாலும் அது அதியுச்ச அதிகார பகிர்வாக  அமையாது. வடக்கு கிழக்கு தனி அலகுகளை கோரும் அளவுக்கு புதிய அரசியல் அமைப்பில் இடமளிக்கப்படாது எனவும் சுட்டிக்காட்டினார். 

தேசிய அரசங்கத்தின் மூலமாக நீண்டகால அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது எவ்வாறான ஒன்றாக அமையும் என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.