(க.கமலநாதன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணைவதற்கான அவசியங்கள் எவையும் ஏற்படவில்லை என முன்னாள் அமைச்சரும் மஹிந்த அணியின் முக்கியஸ்தருமான ஜீ.எல்.பீரிஸ் கேசரிக்கு தெரிவித்தார்.

இதனடிப்படையில் கூட்டு எதிரணியுடன் மஹிந்த தொடர்ந்தும் இணைந்திருப்பார் அவரின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என சுட்டிக்காட்டியிள்ளார்.

மஹிந்த மைத்திரி இணைவு உறுதியென அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ‍‍‍‍ஜோன் செனவிரத்ன ஆகியோர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.