விலங்குகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவற்றின் கூட்டிற்குள் மனிதர்களின் கொண்டாட்டம்.!

Published By: Robert

25 Dec, 2016 | 04:35 PM
image

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். 

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த மானுட அமைப்பானது, பண்டிகை விடுமுறையை ஒட்டி நாய்கள் தத்தெடுப்பதற்கு ஏதுவான வீடுகளை ஆய்வியல் ரீதியில் இனங்கண்டுள்ளனர். குறித்த காப்பகத்தின் பராமரிப்பிலுள்ள நாய்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதலாகவே தத்தெடுக்கும் பட்சத்தில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த பிராணிகளுக்கான கொடுப்பனவுகள் யாவும் தள்ளுபடி என அதிரடி அறிவிப்பை காப்பகம் விட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்பாகவே தத்தெடுக்கப்பட்டுள்ளன என காப்பகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right