தான் மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

மக்களின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.