மனி­த­னாக வந்த இறைவன் மனி­தரின் வேத­னை­களை பாடு­களை நன்கு அறிந்­தவர். அவர் ஏழை­யாகப் பிறந்தார். 40 நாட்கள் உண­வ­ருந்­தாமல் இருந்தார் அவ­ருக்குப் பசி­யெ­டுத்­தது. பசியின் கொடு­மையை அவர் அறிந்­தி­ருந்தார்.  சிறு­வ­ய­தி­லேயே அக­தி­யானார்.

உலகில் பல தலை­சி­றந்த மனி­தர்கள் மதத்­த­லை­வர்கள் மார்க்­கத்­த­லை­வர்கள் அர­சியல் தலை­வர்கள் சிந்­த­னை­யா­ளர்கள், சாத­னை­யா­ளர்கள் விடு­த­லை­யா­ளர்கள் பிறந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்­துவின் பிறப்பு தனித்­து­வ­மா­னது, தன்­னி­க­ரற்­றது. அதற்­கான கார­ணங்­களை நாம் அவ­தா­னிப்போம். 

குறித்த ஒர் இனத்­திற்­கா­கவோ மதத்­திற்­கா­கவோ பிறக்­கா­தவர்

இயேசு கிறிஸ்து கிறிஸ்­தவ மதத்தை ஸ்தாபிப்­ப­தற்­கா­கவோ இஸ்­ரவேல் நாட்­டி­ன­ருக்­காகவோ பிறக்­க­வில்லை. அவர் சகல மானிடர்­க­ளுக்­காவே பிறந்தார் எனவே தான் அவர் பிறந்த போது தேவ­தூதன் “இதோ எல்லா ஜனத்­துக்கும் மிகுந்த  சந்­தோ­ஷத்தை உண்­டாக்கும் நற்­செய்­தியை உங்­க­ளுக்கு அறி­விக்­கி­றேன். (லூக் 2:10)” என்று அவ­ரது பிறப்­பைக்­கு­றித்து அறி­வித்தார். கிறிஸ்து மத இன குல நிற சமூக பாகு­பா­டு­க­ளைக்­க­ளைந்து சகல மனி­தர்­க­ளுக்கும் உரி­யவர்.  ஆபி­ரிக்­கனும் அவரைத் தொழுது கொண்டான் ஐரோப்­பி­யனும் அவரைத் தொழு­துகொண்;டான். வித்­தி­யா­ச­மான மதப்­பின்­ன­னியைச் சேர்ந்­த­வர்­களும் அவ­ரிடம் வந்து அவ­ரைத்­தொ­ழுது கொண்­டனர். அவர் சகல மனி­த­ருக்கும் உரி­யவர் . அவர் வருகை சகல ஜனத்திற்;கும் சந்­தோ­ஷத்தை ஏற்­ப­டுத்தும்  நற்­செய்­தி­யாகும் .

கன்­னியின் வயிற்றில் பிறந்­தவர்

அவர் இவ்­வு­லகில்  பிறப்­ப­தற்கு பல­நூறு வரு­டங்­க­ளுக்கு முன்பே தீர்க்­க­த­ரிசி ஏசாயா என்­பவர் அவர் கன்­னியின் வயிற்றில் பிறப்பார் என உரைத்தார். (ஏசா 9:6) பெத்­ல­கேமில் பிறப்பார் என இன்­னொரு தீர்க்­க­த­ரிசி மீகா உரைத்தார். கன்­னி­யான மரி­யா­ளுக்கு தேவ­தூதன் இதனை முன்­ன­றி­வித்தார் (லூக்) கணவன் மனைவி உட­லு­றவில்லாமல் ஆணின் விந்து சம்­பந்­த­மில்­லாமல் பிறந்­தவர்.

பிறப்­ப­தற்கு முன்­பா­கவே இருந்­தவர்

கிறிஸ்து பிறந்த போது தோன்­றி­ய­வ­ரல்ல கல்தோன்றி மண்­தோன்றா கால முதலே அவர் இருந்தார். அவ­ருக்கு இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு வாழந்த ஆபி­ர­கா­முக்கு முன்பே தான் இருந்­த­தா­கவே அவரே வேதா­க­மத்தில் கூறி­யுள்ளார் (யோவான் 8:58). உலகம் தோன்­று­வ­தற்கு முன்பே பிதா­வோடு இருந்­த­தா­கவும் (யோவான் 1:1,14) அவ­ரோடு அன்­பைப்­ப­கிர்ந்­து­கொண்­ட­தா­கவும் இயேசு கூறு­கிறார் (யோவான் 17:24);. ஆம் அவர் உலகம் படைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே இருந்தார் பர­லோகில் இருந்தார். 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்பு மனி­த­னாக இவ்­வு­ல­கிற்கு வரு­தற்கு முன்பே இருந்தார் அவர் இல்­லா­தி­ருந்த காலமே இருந்;ததில்லை . அவர் இல்­லா­தி­ருக்­கப்­ப­போகும் காலமும் இனி இருக்­கப்­போ­வதில்;லை. அவர் நித்­திய கால­மாக இருப்­பவர் அவ­ருக்குத் தொடக்­கமும் முடிவும் இல்லை. அவ­ரது மனு­அ­வ­தா­ரத்­திற்கே தொடக்­கமும் முடிவும் இருந்­தது. அவர் நித்­தி­ய­மா­னவர்.

4.மனி­த­னாக வந்­தவர்; மனி­தனைப் படைத்­தவர்

“இறைவன் மனி­த­னாகப் பிறக்க வேண்டும்” என்று ஒரு தமிழ் பாடல் உண்டு. அது உண்­மை­யா­கவே நடந்­தது இயேசு கிறிஸ்து  உல­கத்­தோற்­றத்­திற்கு முன்பே இருந்­தவர் மட்­டும்­மல்ல,பர­லோகை விட்டு மனி­த­னாக வந்­தவர் வெறு­மனே இன்­னொரு மனி­த­ரல்ல, வானத்­தையும் பூமி­யையும் அதி­லுள்ள யாவற்­றையும் மனி­த­னையும் படைத்த இறைவன் வேதா­க­மத்தில்  “சக­லமும் அவர் (இயேசு) மூலமாய் உண்­டா­யிற்று : உண்­டா­ன­தொன்றும் அவ­ரா­லே­யல்­லாமல் உண்­டா­க­வில்லை” (யோவான்1:3) என்று பரி­சுத்த வேதம் கூறு­கி­றது.

மனி­தனைத் தனது சாயலில் படைத்த தெய்வம் மனித சாய­லானார். சிற்­பியே சிலை­யா­வது போல மனி­தனை தனது சாயலில் படைத்த இறைவன் மனித சாய­லானார். பர­லோக சந்­தோ­ஷங்­களை அனு­ப­வித்த தேவன், மாமி­சமும் சதையும் எடுத்து மனி­த­னாக வந்தார். ஒரே­நே­ரத்தில் எல்லா இடத்­திலும் இருக்­க­கூ­டிய இறைவன் இயேசு தன்னைக் கட்­டுப்­ப­டுத்தி  மனி­த­னாக வந்தார்.

 மனி­த­னாக வந்த இறைவன் மனி­தரின் வேத­னை­களை பாடு­களை நன்கு அறிந்­தவர். அவர் ஏழை­யாகப் பிறந்தார். 40 நாட்கள் உண­வ­ருந்­தாமல் இருந்தார் அவ­ருக்குப் பசி­யெ­டுத்­தது. பசியின் கொடு­மையை அவர் அறிந்­தி­ருந்தார்.  சிறு­வ­ய­தி­லேயே அக­தி­யானார். இயே­சு­கி­றிஸ்தும் சிறு­கு­ழந்­தை­யா­யி­ருக்கும் போதே எரோது அரசன் இயே­சுவைக் கொல்­வ­தற்­காக சிறு­பிள்­ளை­களைக் கொலை செய்­த­போது இயே­சுவின் வளர்ப்புத் தந்­தையும் இவ்­வு­லகத் தாயும் அவரை எடுத்­துக்­கொண்டு எகிப்து நாட்­டிற்கு அக­தி­க­ளாகச் சென்­றனர்; (மத்2:13-17). அக­தி­யா­யி­ருப்­பதன் அவ­லத்­தையும் அவர் அறிவார்.

நண்­பர்­களால் கைவி­டப்­ப­டு­வதன் வேத­னையை அவர் அறிவார்.அவ­ரோடு ஒன்­றாக இருந்து உண்டு குடித்த அவ­ரது சீடர்­களில் ஒருவன் அவ­ரைத்­தெ­ரி­யா­தென மறு­த­லித்தான். இன்­னொரு சீடன் பணத்­திற்கு ஆசைப்­பட்டு அவரைக் காட்­டிக்­கொ­டுத்தான். அவ­ருக்கு ஆபத்து வந்த வேளையில் அவ­ரிடம் நன்மை பெற்­ற­வர்கள் பலர் அவரை கொலை­செய்­யும்­படி என்று கூக்­கு­ர­லிட்­டனர். நன்­றி­யற்­ற­வர்­களின் நன்­றி­யற்ற தன்­மை­யையும் நண்­பர்­களால் கைவி­டப்­ப­டு­வதன் வேத­னை­யையும் நன்கு அறிவார். 

மனக்­கா­யங்கள் எம் உள்­ளங்­களில் மாறாத வடுக்­­களை ஏற்­ப­டுத்தி விடு­வ­துண்டு. இயே­சு­கி­றிஸ்­துவும்; காயப்­பட்­டவர். எனவே மனக்­கா­யத்தின் வேதனை அவர் அறிவார் . அவர் காயப்­பட்­டவர் மட்­டும்­மல்ல காயங்­களை குண­மாக்­கு­கி­ற­வ­ரா­யு­மி­ருக்­கிறார். 

அவர் பொய்க்­குற்றம் சாட்­டப்­பட்டார் (லூக் 23:4) (லூக் 23:14-15)  பொய்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­ப­டு­வதன் வேதனை அறிந்­தி­ருந்தார். பல­வி­த­மான பொய்க்­குற்­றச்­சாட்­டு­களை அவர் மேல் சுமத்தி; அவரை சிறை­ப்பி­டித்­தனர். செய்­யாத தவ­றுக்­காக பொய்க் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு சிறை­யி­லி­ருப்­பதன் வேதனை அவர் அறிந்­தி­ருக்­கிறார். 

எம்மில் எவ­ருமே அவ­மா­னப்­பட விரும்­ப­வ­தில்லை. நாம் இர­க­சி­யமாச் செய்த தவ­றுகள் கூட மற்­ற­வர்­க­ளுக்குத் தெரிந்தால் அவ­மா­னப்­பட வேண்­டுமே என நாம் அவ்­றறை மூடி மறைக்­கிறோம். இயேசு கிறிஸ்­துவோ தவ­றொன்­றையும் செய்­ய­வில்லை ஆனால் அவரை அவ­மா­னப்­ப­டுத்­தி­னார்கள் 

மரிப்­ப­தற்­கா­கவே பிறந்­தவர்

அவர் பிறந்த நோக்­கமும் தன்­னி­க­ரற்­றது தனித்­து­வ­மா­னது. இன்று அநே மகான்­களும் மதத்­த­லை­வர்­களும் அர­சியல் தலை­வர்­களும் பிறந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருமே வாழ்­வ­தற்­காகப் பிறந்­த­வர்கள். ஆனால் மரிப்­ப­தற்­கா­கவே பிறந்­தவர் இயேசு கிறிஸ்து.

அக்­கா­லத்தில் பலஸ்­தீ­னாவில் பாவம் செய்­த­வர்கள் ஒர் ஆட்­டுக்­குட்­டியை எடுத்து அதன் மேல் கைகளை வைத்து தமது பாவங்­களை அதன் மேல் சுமத்தி அதனை கொலை செய்­வ­துண்டு. பாவத்தை சுமத்­து­கிற மனி­த­னு­டைய பாவங்­களை அந்த ஆடு சுமந்து அந்த மனி­த­னுக்­குப்­ப­தி­லாக மரிப்­ப­துண்டு.  இயேசு கிறிஸ்து ஒரு மனி­த­னு­டைய பாவத்­தை­யல்ல முழு உலக மனி­த­ரு­டைய பாவத்­தையும் சுமந்து முழு மனி­த­ருக்­காவும், மரிப்­ப­தற்­கா­கவே மனி­த­னானர். எனவே யோவான் ஸ்நானகன் இயே­சுவைப் பார்த்து “ இதோ உல­கத்தின் பாவங்ளைச் சுமந்து தீர்க்­கிற தேவ ஆட்­டுக்­குட்டி (யோவான் 1:29)” என்றார். இயேசு இவ்­வு­ல­கிற்கு வந்த ஒரு முக்­கி­ய­கா­ரணம் எனக்­கா­கவும் உங்­க­ளுக்­கா­கவும் ( மதம், இனம், குலம் கடந்து அனை­வ­ருக்­காவும்) மரிப்­ப­தற்­காக வந்தார். 

“ நாம் பாவி­களாய் இருக்­கையில் கிறிஸ்து நமக்­காக மரித்­த­தி­னாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்­கப்­பண்­ணினார் ( ரோமர் 5:8)” உங்­க­ளுக்­காக உயி­ரையே கொடுக்­கு­ம­ள­விற்கு உங்­களை நேசிக்­கிறார். உங்கள் பாவங்ளைத் தன்மேல் ஏற்று அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தார். நான் தவறு செய்து இன்னொருவர் எனது தண்டனையைஏற்று சிறைக்குச் செல்வது போல நானும் நீங்களும் செய்த பாவங்களுக்கான தண்டனையை அவர் ஏற்று சிலுலையில் மரித்தார்  எனவே தான் பைபிலில் “ மெய்யாகவே அவர்(இயேசு) நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை சுமந்தார். நம்முடைய மீறுதல்களினினிமித்தம்( பாவங்கள்) அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்.  நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம  ( ஏசா 53:4-5;” 

ஆகவே கிறிஸ்துவின்  பிறப்பு மானிட மக்கள் பாவத்திலிருந்து விடுதலை  பெறுவதற்காகவே  இவ்வுலகிற்கு வந்ததை உணர்த்துகிறது . இதனை புரிந்து  ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக  நாம் அனைவரும்  உண்மையான சமாதானத்துடன்  வாழ்வோம்