மொரடுவை லக்ஷபத்திய  பகுதியில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டஇளைஞர் 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் 3 வீடுகளை உடைத்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.