அண்மையில் கொழும்பில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் இணையத்தில் பலர் தமது கருத்துக்களால் எனக்கு சேரு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இவ்வாறு சேறு பூசுவதால் தனக்கு ஏதும் நேராது என சுட்டிக்காட்டி இந்த நாட்டிலே கலாச்சாரச் சீரழிவே ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு சேறுபூசும் நபர்கள் கோரிக்கைவிடுப்பது இந்நாட்டில் ஆடைகள் இன்றி வீதியில் செல்லவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன் இந்த விடயத்தால் நாட்டின் கலாச்சாரம் எவ்வளவு குறைத்து மதிப்பிடப்படும் எனவும் தான் அவர்களிடம் கேள்வி எழுப்புவதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்தவாரம் கொழும்பில் வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் நேற்று முன்தினம் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி கருத்து தெரிவித்த போது, பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேலும் இடமளிக்கப்போவதில்லையென தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றியபோது, பெண்கள் உள்ளாடைகளை கழற்றி மேடையை நோக்கி வீசியதாகவும், இதன்பின்னர் இவ்வாறான ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் இந்நிகழ்ச்சி தொடர்பில் ஜனாதிபதி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த இசை நிகழ்ச்சியின் போது 5000 முதல் 50,000 வரை டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டன, உள்ளே நுழைந்ததும் டிக்கெட்டின் விலைக்கமைய மதுப்பானம் வழங்கப்பட்டுள்ளதோடு அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதம் தொடர்பில் நாடு முழுவதும் மற்றும் சமூகவலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான காரணம் இந்நிகழ்சியின் போது அரங்கேறிய இலங்கையின் கலச்சாரத்திற்கு பொருந்தாத அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமையாகும்.

இது தொடர்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது. நாட்டில் கலாச்சாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால் அது தொடர்பில் பேசவேண்டியுள்ளது.

நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.