19 வயதுக்குற்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வெற்றிக்கொண்டு இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இன்று ஆர்.பிரேமாதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதனடிப்படையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் சப்மான் கில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ரன்சிக மற்றும் ஜெயவிக்ரம தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 274 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் கெல்லி 62 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் அபிசேக் சர்மா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.