கடத்தப்பட்ட லிபிய பயணிகள் விமானத்திலிருந்த 118 பயணிகளில் 25 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மல்டா பிரதமர் ஜோசப் முஸ்கட் தெரிவித்துள்ளார்.

ஆப்ரிகியா ஏயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏயார்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்த போது  குறித்த விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டு மல்டாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தை கடத்தியுள்ளதாக கூறப்படும் இருவரும் சர்வாதிகாரி முவம்மர் கடாபியின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.