முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி என்பது துருக்கி, பெர்லின் தாக்குதல் மூலம் தெளிவாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள டீரம்பின் மார் ஏலாகோ தோட்ட மாளிகையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பெர்லின் தாக்கதல் மற்றும் துருக்கி தாக்குதல் என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு தனியான பதிவேடுகளை உருவாக்கல் மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்காமை எனும் திட்டங்களை நடைமுறைபடுத்தவுள்ளதாக கூறி பல்வேறு சர்சைகளை டிரம்ப் ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் டிரம்ப் பேசுகையில் ஐரோப்பா மற்றும் துருக்கி மீதான தாக்குதல்கள் மிகமிக பயங்கரமானவை தமது நாடு புலனாய்வு மற்றும் துப்பறிதலில் முன்னணி நாடாக வளர்ந்து வரும் நிலையில் குறித்த இத்தாக்குதல் சம்பவம் மனித சமுகத்தின் மீது கொடூர வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் தாக்குதலாகவே தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் குறித்த தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு தங்களின் முஸ்லிம்கள் மீதான எதிர்கால திட்டத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? ஏனக் கேள்வியெழுப்பிய போது தான் முன்வைத்த திட்டமானது 100 வீதம் சரியானது, அநேகமானோருக்கு புரிந்திருக்கும் என பதில் அளித்துள்ளார்.