நுவரெலியா மாவட்டம் - கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட 13 தோட்டங்களில் சொந்தமான 25 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பாதையின் செப்பணிடும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

குறித்த பாதை கடந்த அரசாங்கத்தின் போது 04 கிலோ மீற்றர் வரை செப்பனிடப்பட்டு அரசாங்கம் மாற்றமடைந்த  பின்னர் கைவிடபட்டுள்ளது. 

சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற இத்தோட்டங்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிளாலர்கள்  தொழில் புரிகின்றனர். 

ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த பாதையின் வேலைத்திட்டம் ஆரபிக்கப்பட்ட போதும் தற்போது கைவிடபட்டுள்ளது. குறித்த பாதையில் சேவையில் ஈடுபட்டு வந்த இ.போ.ச. பஸ் போக்குவரத்து பாதை மோசமான நிலையின் காரணமாக 10 வருடமாக நிரறுத்தபட்டுள்ளது. 

இப்பிரதேசத்தில் உள்ள போக்குவரத்து சிக்கல் காரணமாக வைத்தியர்கள் இப்பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு நியமனம் பெறுவதில்லை.

ஆசிரியர்கள் மிகவும் துன்பத்தின் மத்தியில் பாடசாலைக்கு சென்று கல்வி கற்பித்து வருகின்றனர். 

இந்த பாதை செப்பனிடப்படாததால்  தோட்ட மக்கள் மேலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் அன்றாட தேவைகள் உட்பட பாடசாலை செல்வதற்கு மாணவர்களும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் மேலதிக அவசர வைத்திய சிகிச்சைகளுக்காக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையையே நாட வேண்டியுள்ளது. பாதையின் சீரற்ற தன்மையினால் வைத்தியசாலைக்கு செல்லும் முன் பல மரணங்களும் சம்பவித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு பாதையில் வைத்து குழந்தை பிரசவித்துள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறான அவல நிலைகளை போக்குவதற்கு இந்த பாதையை உடடியாக திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.