19 வய­திற்­குட்­பட்­டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின்  இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 26  ஓட்டங்களால் பங்களதேஷ் அணியை வெற்றிக்கொண்டதுடன், இந்திய அணி 77 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது.

இந்நிலையில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப்போவது எந்த அணி என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த போட்டி இலங்கை நேரப்படி மதியம் 2.30 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாச  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.