ஊவா மாகாண சபையின்அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேலதிக 04 வாக்குகளால்  தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்டமூலம் ஊவா மாகாண ஆளுநர் எம்.ஜீ. ஜயசேனவினவால் வாக்கெடுப்புக்காக நேற்று (22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு  ஆதரவாக 09 வாக்குகள் பெறப்பட்ட நிலையில் எதிராக 13 வாக்குகள் பெறப்பட்டுள்ளது. 

ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க குறித்த சட்டமூலத்துக்கு வாக்களிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.