படுக்கையிலிருந்து விழுந்த 18 மாத குழந்தை உயிரை காப்பாற்ற பல்வேறு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டிவரும் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அவுஸ்ரேலியாவை சேர்ந்த லிபர்ட்கோ என்பவரின் 18 மாத குழந்தை “ஹெட்டி” உறங்கும் போது கட்டிலிருந்து விழ, தலைப்பகுதி தரையில் பட்டு இரண்டாக பிளந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு ஏற்பட்ட கொடுர காயங்களை சத்திரசிகிச்சை மூலம் சரி செய்த வைத்தியர்கள் சில வாரங்களுக்கு பிறகு அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

மிகவும் குறும்புத்தனமான ஹெட்டி தனக்கு செய்திருக்கும் சத்திரசிகிச்சையின் நிலைதெரியாமல் தனது தலையை சுவரில் மோதி விளையாடவே அவரது தலைப்பகுதியில் அடிபட்டு கண்கள் கருமை நிறமாக மாறி, தலைப்பகுதியில் சிறுகட்டியை போல் உருவாகியுள்ளது.

கட்டி காலப்போக்கில் பெரிதாகி அகற்றுவதற்க மீண்டுமொரு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சையின் பிறகு தலைப்பகுதியில் இரத்த கசிவு தொடரவே இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மூன்றாவது சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் இரண்டு நாட்களில் இரத்த கசிவு மூளையை தாக்கும் நோயை உருவாக்கியுள்ளது.

இருப்பினும் உறைநிலை மருந்துகளை கொண்டு இரத்த கசிவு கட்டுப்படுத்தப்பட்டாலும், அவரது மூளையை பாதுகாப்பதற்கு எப்பொழுதும் தலை கவசம் ஒன்றை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைத்திர்கள் தலைப்பகுதியில் எலும்புகள் வளராதவிடத்து அடுத்த கட்ட சத்திரசிகிச்சை மேற்கொண்டால் மாத்திரமே குழந்தையை காப்பாற்ற முடியும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை காப்பாற்றுவதற்கு வெளிநபர்களிடமிருந்து பொருளாதார உதவிகளை பெறவேண்டிய நிலைக்கு சிறுவனின் பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர். 

வைத்திய துறை நவீனமயமடைந்திருந்தாலும் அதற்கான கட்டணங்கள் அதிகம் என்பதால் நடுத்தரமான நபர்கள் இன்றளவும் இன்னல் மிக்கவர்களாவே கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.