(லியோ நிரோஷ தர்ஷன்)

வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதனடிப்படையில் அவர்களுக்கு உயரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தூதுவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நட்பு நாடுகளில் இராஜதந்திர பணிகளில் ஈடுப்பட்டு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலகின் ஏனைய நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வழங்கப்படும் உயரிய பாதுகாப்பு நியதிகளுக்கு உட்பட்ட வகையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.