புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் அமைப்பு குறித்து ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு நிலைப்பாட்டை முன்வைப்பதுடன், ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சி வேறு நிலைப்பாட்டைத் தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சி  ஆகியன இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியிருக்கும் போது இரண்டு கட்சிகளுக்கும்  இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. இது ஜனநாயக செயற்பாடும் அல்லவென தெரிவித்தார்.