நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தவே ஆட்சிக்கு வந்தோம் - மட்டக்களப்பில் ராஜபக்ஷ

21 Dec, 2016 | 08:11 PM
image

 (பழுலுல்லாஹ் பர்ஹான்)

அனைத்து கட்சியினரதும் ஆதரவுடன் இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு சிறந்த முறையில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நல்லதோர் ஆட்சியாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களை கவனிப்பதற்கு அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ,சிங்கள கிழக்கு மாகாண சபை உறுப்பினரோ யாருமே இல்லாமல் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகின்றனர் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன நல்லிணக்கம் தொடர்பில்  நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று 21 புதன்கிழமை மட்டக்களப்பிற்கு  திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு மங்களராம விகாரைக்குச் சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் அங்கு வருகைதந்திருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்படி கருத்துத் தெரிவித்தார்.

மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இன்று என்னிடம் சிங்கள மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் கூறவில்லை அதற்கு மாறாக தமிழ்,முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும்தான் கூறினார் எல்லோருக்கம் சில பிரச்சினைகள் இருக்கின்றது. 

சிறுபான்மையாக மட்டக்களப்பில் வாழும் சிங்கள மக்களுக்கு கிராம சேவர் அத்தாட்சிப் பத்திரம் வழங்காமை,தேர்தல் வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்காமை,காணிப் பிரச்சினை,பாரம்பரிய காணிப் பிரச்சினைகள் ,சிங்கள அதிகாரிகள் இல்லாத பிரதேச செயலகங்கள் இல்லாமை, சிங்கள மக்களின் பிரச்சினைகளை கூறுவதற்கு சிங்களம் பேச தெரியாத அதிகாரிகள் பிரதேச செயலகங்களில் இருப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்பில் மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கதைத்து வருகின்றார்.   

அமைச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இன நல்லுறவு இன நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் இரண்டு தடவைகள் பேசியுள்ளேன். இப் பேச்சின் மூலமாக நான் அதிகம் விமர்சனங்களுக்குள் உள்ளானேன். 

நான் இன மத பேதங்களின்றி நல்லாட்சியில் இருந்துகொண்டு சேவை செய்கின்றேன். என்னைப்பற் நல்லதாகவும் கெட்டதாகவும் விமர்சனங்கள் எழலாம் அதைப்பற்றி பொருட்படுத்தாது மக்களுக்கான பணியை நான் சிறந்தமுறையில் செய்து வருகின்றேன்.

நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்தவே ஆட்சிக்கு வந்தோம் அந்தப் பணியினை தொடர்ந்து முன்னேற்றகரமாக செய்து வருகின்றோம் அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இப் பிரதேசத்தில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு உரிமைகள் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் யாவருக்கும் சமாமாக கிடைக்க வேண்டும்.

இனங்களுக்கிடையே உறவுகள் ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்காகும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52