துருக்கி நாட்டின் ரஷ்ய தூதுவர்  ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட அவரை மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். 

இந்நிலையில் தூதுவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது குறித்த மர்ம நபர் அங்கும் இங்குமாக நடப்பதும் பின்னர் தனது துப்பாக்கி இருக்கிறதா என இரு முறை உறுதி செய்து கொள்வதும் பின்னர் தூதுவரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதுமான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

துருக்கி நாட்டின் ரஷ்ய தூதர் ஹெண்ட்ரே கர்லோவ், அந்நாட்டின் தலைநகர் அங்காராவில்  இடம்பெற்ற ஒரு கண்காட்சியில் கலந்துகொண்ட போது மர்ம மனிதர் ஒருவர்  துப்பாக்கி சூட்டை மேற்கொண்டிருந்தார்.

சிரிய விவகாரங்களில், ரஷ்யாவின் தலையீட்டை எதிர்த்து இந்த தாக்குதல் நடந்துள்ளது என செய்திகள் தெரித்தன.

தாக்குதலையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட தூதுவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 தாக்குதல் நடத்தியவர் துருக்கி காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும், தூதுவரை சுட்டபின்பு, 'சிரியாவையும், அலெப்போவையும் மறந்து விடாதீர்கள்' எனக் கூச்சலிட்டமையும் குறிப்பிடத்தக்கது.