கட்டுநாயக்க - ஆடிஅம்பல பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் ரவைகள் வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த நபரை இன்று (21) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 48 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.