உடலை தடித்த போர்வையால் போர்த்தியவாறு பங்கேற்ற பெண் எம்.பி்

Published By: Robert

29 Dec, 2015 | 01:40 PM
image

குளிரின் போது படுக்கையில் போர்த்திக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் தடித்த போர்வையால் உடலை மூடியவாறு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்று சிலிய பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கார்லா ரூபிலர் (38 வயது) என்ற மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தலைநகர் சான்தியகோவில் இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது தனது இருக்கையில் தடித்த போர்வையால் போர்த்தியவாறு அமர்ந்திருந்தமை அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய தினம் பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக கட்டணங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்டப் பிரேரணையொன்று குறித்து விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவிருந்தன.

இது தொடர்பில் கார்லா கூறுகையில், தான் மிகவும் சுகவீனமுற்றிருந்ததாகவும் இந்நிலையில் முக்கியத்துவம் மிக்க பாராளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என விரும்பி தனது சுகவீனத்தையும் பொருட்படுத்தாது அங்கு ஆஜராகியிருந்ததாகவும் தெரிவித்தார்.

“ நான் கடும் சுகவீனமுற்றிருந்தேன் அதனால் என்னால் மேற்படி சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எவ்வழியிலாவது நோய்க்கு இதமளித்து பாராளுமன்ற விவாதத்திலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலும் பங்கேற்ற முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17