கைதுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர்  சஷி வெல்கமவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 135 மில்லியன் ரூபாவினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சஷி வெல்கமவை இன்று (20) கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.