இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர்  சஷி வெல்கமவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சற்றுமுன்னர் கைதுசெய்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 135 மில்லியன் ரூபாவினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சஷி வெல்கம பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.