கண்டி, பல்லேகலே பிரதேசத்தில் நேற்றிரவு 10.16 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தின் கீழ் பாரிய பிளவடையும் சத்தம் கேட்டு பிரதேச மக்கள் பீதியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும் பல்லேகலே பிரதேசத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக பூகோளவியல் திணைக்களமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ மையமோ இதுவரையில் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.