அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் கொழும்பில் சிக்கியது : பின்னணியில் யார்?

Published By: Ponmalar

20 Dec, 2016 | 03:14 PM
image

கடந்த ஆட்சிக்காலத்தின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள 40 இலட்சம் பெறுமதியான அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை  கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கொழும்பு அப்துல் ஹமீட் வீதியில் உள்ள சில்வர்சுமித் லேன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த மோட்டார் சைக்கள் கைப்பற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளானது பாதாள உலக குழுவினரின் இரகசிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு பாதாள உலக குழு தொடர்பான இரகசிய தகவொலுன்று கிடைத்தமைக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த  1200 சி.சி. இயந்திர சக்திக்கொண்ட “டுக்காட்டி” ரக மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவிக்கையில், குறித்த மோட்டார் சைக்கிள்  நண்பர் ஒருவரால் தனக்கு பரிசளிக்கப்பட்டதென்றும், அவர் இறந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,  கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை எமது நாட்டின் வீதிகளில் செலுத்த முடியாது. 

மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் அதீத சக்தியினால் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு இந்நாட்டில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மோட்டார் வாகன  சட்டத்தின் கீழ் இவ்வகையான மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதுமாத்திரமின்றி குறித்த மோட்டார் சைக்கிளானது முன்னாள் மிக முக்கியஸ்தரின் மகனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள்  எவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது?, யாருக்காக கொண்டுவரப்பட்டது?, மற்றும் இப்பொழுது இறுதியாக எவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடம் வந்துள்ளது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20