மியன்மாரில் உள்ள ரொஹிங்கியோ முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கொடுமையான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை நிறைவுக்கு கொண்டு வர கால அவகாசம் தேவையென அந்நாட்டு தலைவர் ஆன்சாங் சூகி தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என அயல் நாட்டு வெளியுறவு அமைச்சர்களால் ஏற்பாடு 

செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பங்குபற்றிய போதே ஆன்சான் சூகி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆன்சான் சூகி தெரிவித்துள்ளார். 

இருப்பினும் பதற்றநிலை அதிகமாக உள்ள ரக்கீன் மாநிலத்தின் ரொஹிங்கியோ முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மாத்திரம் தொடர்ந்து தனிமை படுத்தப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.