கிறிஸ்மஸ் சந்தையில் தீவிரவாத தாக்குதல் ; 12 பேர் பலி ; ஜேர்மனியில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

20 Dec, 2016 | 08:27 AM
image

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையினுள் திடீரென லொறி புகுந்தததில் 12 பேர் பலியானதோடு, 48 பேர் படுகாயமடைந்தனர். 

குறித்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் மக்கள் அதிகமாகவுள்ள சமயத்தில் அப்போது கூட்டத்திற்குள் திடீரென லொறியினை  வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்ததோடு 48 பேர் படுகாயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாகவும், மற்றைய நபர் கைது செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பெர்லின் நகரில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10