குளியலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யை போதைப் பொருளாக பயன்படுத்தி அருந்திய 25 பேர் இறந்துள்ளனர். இச் சம்பவம் ரஷ்யாவின் சைபிரிய பிராந்தியத்திலுள்ள இர்குட்ஸ்க் நகரத்திலேயே பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேச மக்களின் வருமானம் குறைவாக காணப்படுவதால் இவர்கள் குளியலுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்யை போதைப் பொருளாக பாவித்து வந்துள்ளனர்.

6 ஆயிரம் வாழும் குறித்த பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் அதிகளவாக குளியலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை அறிந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலேயே இந்த அதிர்ச்சிகர சம்பவம் தெரியவந்துள்ளது.

குளியலுக்காக பயன்படுத்தப்படும் குறித்த எண்ணெய்யில் மெத்திலேற் வாயு கலக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு அட்டையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரதேச வாசிகள் அதனை போதைப் பொருளாக பயன்படுத்தியுள்ளனர்.

இதனாலே குறித்த இறப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இதுவரையிலும் வைத்தியசாலையில் 42 பேர் அனுமதிக்கப்பட்டு அவர்களுள் 25 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் 100இற்கும் மேற்பட்ட சட்டவிரோத விற்பனை  இனங்காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறுகையில், நாட்டில் சட்விரோதமான தடைசெய்யப்பட்ட பாணங்கள் மற்றும் உற்பத்திகளை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதேவேளை இதுவரை 2000 லீட்டருக்கும் மேற்பட்ட எண்ணெய் வகை கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ச்சியான தேடல்கள் நடத்தி பதுக்கியுள்ள எண்ணெய் உற்பத்திகளை மீட்காதவிடத்து  இறப்பு வீதம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.