(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு தரப்பு பிரச்சினையை அரசியலாக்கி ஆட்சி மாற்ற சூழ்ச்சியை சர்வதேசம் முன்னெடுத்தது. இதன் விளைவாக இலங்கை இன்று இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவின் தீவிர ஆக்கிரமிப்பிற்குள் காணப்படுகின்றது. இனி நாடு மிஞ்சுமா என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார். 

ஆட்சி மாற்ற சூழ்ச்சிக்கு எமது அரசாங்கத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கியவர்கள் நல்லாட்சியிலும் அமைச்சர்களாக உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பது தேசியத்துவத்தை பாதுகாக்கும் கொள்கையுடையது. அதற்கு எதிராக செல்லும் தற்போதைய ஆட்சியார்களுக்கு காலம் கடந்து தேர்தல் வைத்தாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஹம்பந்தோட்டை மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.