டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல்

Published By: Raam

19 Dec, 2016 | 03:30 PM
image

தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்பட்டு ஹிலாரியை ஜனாதிபதியாகும் சாத்தியமுள்ளது.

ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவாவதற்கு நாளை 20 ஆம் திகதி இடம்பெறும் தேர்வாளர் வாக்களிப்பில் ஹிலாரி அதிக வாக்குகள் பெற்றால் டிரம்பால் ஜனாதிபதியாகும் வாய்ப்பை பெறமுடியாத நிலை ஏற்படும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராதவிமாக டிரம்ப் வெற்றி பெற்றார். அதே நேரம் அதிக எதிர்பார்பபை ஏற்படுத்தியிருந்த ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சியான தோல்வியை தழுவியிருந்தார்.

ஹிலாரிக்கு டிரம்பை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை முடிவு செய்யும் அதிகாரமானது தேரல்தல் கல்லூரியினால் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படும். 

அதனடிப்படையில் டிரம்பிற்கு 306, ஹிலாரிக்கு 232 தேர்வாளர்கள் வாக்களித்து டிரம்ப் ஜனாதிபதியாவதை உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையில அடுத்தக்கட்ட தேர்வாளர் வாக்கு பதிவுகள் நாளை (20) இடம்பெறவுள்ளன. சில வேளை தேர்வாளர்கள் தமது வாக்கை மாற்றியளிக்கும் நிலையில் டிரம்ப் அடுத்த ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹிலாரிக்கு ஆதரவாளர்கள் ஆர்பாட்டங்களில் இடம்பெற்று வருவதோடு, தேர்வாளர்கள் ஹிலாரியை தேர்வு செய்யவேண்டும் எனும் கோஷங்கள் மேலோங்கியுள்ளன. அத்தோடு டிரம்பின் பேச்சுகள் நாட்டில் பிரச்சினையை தூண்டுவதாக கூறி குடியரசு தேர்வாளர்களுக்கு தனிபட்ட ரீதியில் ஹிலாரியை ஜனாதிபதியை தெரிவு செய்யக்கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

நாளை இடம்பெறும் தேர்வாளர் வாக்களிப்பில் ஹிலாரி அல்லது டிரம்ப் ஆகியோரில் 270 வாக்குகளுக்கு மேல் பெறுபவர்கள் ஜனாதிபதியாகுவார்கள். இருவரும் தனியே 270 வாக்குகளை பெறாத நிலையில் நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு போகும் என்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47